Friday, October 12, 2012

முருகன் அருள்

முருகன் அருள் கிடைக்கும்
என காலண்டர் வாங்க சொல்லி
என்னை கற்பழிக்க முயன்ற
பழனி அடிவார பெரியவரிடம்,

நீங்கள் செய்வது
வியாபாரமல்ல தொந்திரவு
என கூறிய போது
முகம் சிவந்து, சினந்து
சென்றார்...

அதே காலண்டரை வைத்திருக்கும்
அவருக்கு ஏன் முருகன்
அருள் கிடைக்கவில்லை
கிடைத்திருந்தால் இந்நேரம்
நான் காலண்டர்
வாங்கிதொலைத்திருப்பேன் ...

சிந்தனைகள்

தலையாட்டும் சமய சிந்தனைகள் தொலையட்டும்,
பூக்கட்டும் பூக்கள்,
பரவட்டும் பரவசம்,

இருந்தாலும் இந்த கடவுளை வேண்டிக்கொள்ளுக என
கூறிசெல்லும் வாலிப , வயோதிக அன்பர்களே

வாழ்வு அற்புதமானது அதை அதன் போக்கில் அனுபவித்தால்...
உன் கடவுள் உன் சட்டைப்பையிலும்
என கடவுள் என் சட்டைப்பையிலும் இருக்கட்டும்

நம் மனிதம் நம்மை பிணைக்கட்டும்...

குல தெய்வம்


நான் இந்த சாமி கும்பிடுறேன்..
நீங்க எந்த சாமி கும்பிடுறீங்க, என கேட்டு நச்சரித்தவனுக்கு,
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென
சொல்லி புரிய வைக்க முடியவில்லை...

அதனால் நான் அந்த ஜாதி என்று சொல்லிவிட்டேன்
சட்டென புரிந்து கொண்டான் என கடவுளை,

போன வாரம் அவன "Fire" பண்ணிட்டாங்க
எதுக்கு வம்பு பேசாம நீங்களும் சாமி கும்பிடாம இருக்கறது நல்லது...
எனக்கு onsite கொடுக்கலாம்ன்னு பேசிக்கறாங்க....

மர்மம்

ஒரு ரோஜாவை ரசிக்க,
அதிக பட்சம், குறைவான சிந்தனைகள் மட்டும் போதும்,
ரோஜாவை கொடுத்தது கடவுள்
உனக்கு பார்வையை கொடுத்தது கடவுள்,
உன்னை ரசிக்க வைப்பது கடவுள், எவ்வளவு விளக்கங்கள்???
ஒரு டீ கடைல ஒருத்தனே டீ போட்டு ஒருத்தனே குடிக்க
எதுக்கு டீ கடை?

கடவுளே

கடவுளே இல்லை என்கிறேன் நான்,
முதலில் எனக்கு கடவுள் நம்பிக்கை வர ஒரு கடவுள் வேண்டும்...
பின் வேண்டுதல்கள் நிறைவேற இன்னொன்று
பின் பணம் கொடுக்க இன்னொன்று
பின் பிணம் எரிக்க சிறந்த இடமாய் திகல இன்னொன்று
பின் பால் குடிக்க ஒன்று

ச்சே எத்தனை கடவுளின் தேவை இருக்கு நான்  வாழ !?!
அப்போ எதுக்கு கையும் காலும் மூளையும்?
கடவுளே கொடுக்கட்டும் சோற்றையும், சுகத்தையும்,

கடவுளே என்ன நடக்குது இங்கே...!!!

வாழ்வின் அற்புதங்கள்


வாழ்வின் அற்புதங்கள்
திறக்கையில் பிரசவ வலி,
வலிக்கு பயந்து தொலைத்த
அற்புதங்களின் நினைவுகள்
வராமலிருக்க எந்த கடவுளை
வேண்ட?

 

வாழ்க

வாழ்க குழப்பங்கள்
வளர்க சந்தேகங்கள்
கலையட்டும் ஒப்பனைகள்
நிலைக்கட்டும் நிலையாமை
நனையட்டும் நினைவுகள்
படரட்டும் அர்த்தமின்மையின் அமைதி கரங்கள்
பிறக்கட்டும் தெளிவுகள்
புரியட்டும் புதிர்கள்...